
லண்டன்,
ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர். படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமாகி இருப்பவர் ராம் சரண். இவர் தற்போது பெத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு மார்ச் 27-ம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில், ராம் சரணுக்கு லண்டனில் மிகப்பெரிய கவுரவம் கிடைத்துள்ளது. லண்டன் ராயல் ஆல்பெர்ட் ஹாலில் ஆர்.ஆர்.ஆர் படம் திரையிடப்பட நிகழ்ச்சியில் படக்குழுவுடன் உற்சாகத்தோடு ராம்சரண் பங்கேற்றார்.
இது ஒருபக்கம் என்றால், லண்டனில் புகழ்பெற்ற மேடம் துசாட்ஸ் மியூசியத்தில் தத்ரூபமாக ராம்சரணுடைய மெழுகு சிலை வடிவமைத்து வைத்திருக்கிறார்கள். இதில் சிறப்பு என்னவென்றால் அவருடைய நாய்குட்டியையும் சேர்த்து வடிவமைத்திருப்பதுதான்.
இதுமட்டுமில்லாமல் அவருடைய மகள், மெழுகு சிலையுடன் ராம் சரணை பார்த்து குழப்பத்துடனும் ஆச்சரியத்துடனும் அருகில் செல்லும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.