
அமராவதி,
காஷ்மீரில் கடந்த மாதம் நடந்த பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தியது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து இந்தியா மீது பாகிஸ்தான் டிரோன், ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது டிரோன், ஏவுகணை தாக்குதலை இந்தியா நடத்தியது. இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. இந்த மோதல் தற்போது பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு வந்துள்ளது. ஆனாலும், எல்லையில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்நிலையில், நாட்டின் எல்லைகளை கண்காணிக்க 18ம் தேதி ரிசார்ட்-1பி செயற்கைக்கோளை இந்தியா ஏவ உள்ளது. பாகிஸ்தான் மற்றும் சீன எல்லைகளை கண்காணிக்கும் வகையில் ரிசாட் செயற்கைக்கோளை இஸ்ரோ உருவாக்கியுள்ளது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்து இந்தியாவின் பாதுகாப்பை மேலும் அதிகரிக்கும் நோக்கில் பிஎஸ்எல்வி-சி61 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து 18ம் செயற்கைக்கோள் ஏவப்பட உள்ளது.