
ஆதம்பூர்,
பஞ்சாப் ஆதம்பூர் விமானப்படை தளத்திற்கு சென்ற பிரதமர் மோடி வீரர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:-
முப்படைகளுக்கும் நான் வணக்கம் செலுத்துகிறேன். உங்களை பார்ப்பதில் எனக்கு பெருமையாக உள்ளது. உலகமே உங்களை பாராட்டுகிறது. பயங்கரவாதத்தை மண்ணோடு மண்ணாக்கினோம். நம்மை அழிக்க நினைத்தவர்களை நீங்கள் அழித்தீர்கள்.
போரின்போது நாடெங்கும் பாரத் மாதாகி ஜே என்ற முழுக்கம் எதிரொலித்தது. பாகிஸ்தானின் தாக்குதலை நாம் வெற்றிகரமாக கையாண்டோம். இந்தியாவின் சேனைக்கு அவர்கள் சவால் விடுத்தனர். அணு ஆயுத பூச்சாண்டி இனிமேல் செல்லுபடியாகாது என்றார்.
பாகிஸ்தான் அழித்ததாக கூறிய எஸ் 400 வான் பாதுகாப்பு அமைப்பு முன்பு நின்று பிரதமர் மோடி உரையாற்றினார்.