மெத்தபெட்டமைன் போதைப் பொருள் விற்பனை செய்ததாக பெண் உள்பட 5 பேர் கைது.!

2 months ago 12
சென்னையில் மதுபான விடுதிகள், பப்புகள் மற்றும் இளைஞர்களுக்கு மெத்தபெட்டமைன் போதை பொருளை விற்பனை செய்ததாக ஒரு பெண், 17 வயது சிறுவன் உள்பட 5 பேரை கைது செய்ததாக எஸ்பிளனேடு போலீசார் தெரிவித்துள்ளனர். உயர் நீதிமன்றம் அருகே உள்ள பிரகாசம் சாலையில் புதன்கிழமை இரவு சென்னை காவல் ஆணையர் அருணின் சிறப்பு போதைப் பொருள் ஒழிப்பு நுண்ணறிவு பிரிவை சேர்ந்த போலீசார் சோதனை மேற்கொண்ட இரண்டு டூவீலர்களில் வந்த 6 பேரை சுற்றி வளைத்தனர். அப்போது, அவர்களில் இருவர் தப்பி ஓடினர். எஞ்சிய 4 பேரிடம் சோதனை நடத்தியதில் 2 கிராம் மெத்தபெட்டமைனும், அவர்கள் அளித்த தகவலின் பேரில் பப்களுக்கு வருபவர்களை குறி வைத்து மெத்தம்பெட்டமைன் சப்ளை செய்த மணலியை சேர்ந்த சகிமா மௌசியா என்ற பெண்ணின் வீட்டில் சோதனை நடத்தி 5 கிராம் மெத்தபெட்டமைனும் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். தந்தை அக்பர் அலி போதை பொருள் கடத்தல் வழக்கில் 12 ஆண்டுகள் தண்டனை பெற்று சிறையில் உள்ள நிலையில், அவருக்கு பிறகு சகிமா மௌசியா போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Read Entire Article