ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்தினருடன் நேற்று வந்தார். காலை தனுஷ்கோடியில் உள்ள சேது தீர்த்தத்தில் புனித நீராடினார். காசி – ராமேஸ்வரம் யாத்திரை மேற்கொண்டுள்ள ஓபிஎஸ் கடந்த மே 2ம் தேதி ராமேஸ்வரம் கோயிலில் புனித நீராடி புண்ணிய தீர்த்தத்தை காசி எடுத்துச் சென்றார். அங்கு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தி விட்டு, காசி கங்கை நீரை எடுத்துக் கொண்டு மீண்டும் ராமேஸ்வரம் கோயிலில் வழிபாடு நடத்த நேற்று குடும்பத்துடன் வந்தார்.
ராமநாத சுவாமி மூலவர் சன்னதி அருகே உள்ள காசி விஸ்வநாதர் சன்னதி முன்பு 45 நிமிடங்கள் ருத்ராபிஷேக பூஜை நடைபெற்றது. இந்த பூஜை செய்வதால் பாவங்கள் நீங்கி, இது செல்வத்தை ஈர்க்கும், கஷ்டங்களை போக்கும். எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்யும்; நல்ல பலன்கள் கிடைக்கும் என்பது ஆன்மிக நம்பிக்கை. பூஜைக்கு பின் மூலவருக்கு கங்கை, பால், கோடி தீர்த்த அபிஷேகம் செய்து சுவாமி தரிசனம் செய்து காசி – ராமேஸ்வரம் யாத்திரையை நிறைவு செய்தார். மாநிலங்களவை உறுப்பினர் தர்மர் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
The post காசியில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து கஷ்டங்களை போக்க ஓபிஎஸ் சிறப்பு பூஜை: ராமேஸ்வரத்தில் குடும்பத்துடன் வழிபாடு appeared first on Dinakaran.