மெட்ரோ ரயில் பயணிகள் கவனத்துக்கு…தண்ணீர் தேங்கும் பகுதியில் நுழைய வேண்டாம், பார்க்கிங்கில் வாகனம் நிறுத்த அனுமதி கிடையாது

1 month ago 5

சென்னை: மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என பயணிகளை மெட்ரோ நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் கடந்தாண்டு மழையின் போது முட்டியளவு வெள்ளம், வாகன நிறுத்தும் இடத்தில் தேங்கியது. இதனால் பார்க்கிங் மூடப்பட்டது. அதேபோல் இந்த மழைக்கு சில நிபந்தனைகளை மெட்ரோ நிர்வாகம் விதித்துள்ளது. இதுதொடர்பாக மெட்ரோ நிர்வாகம் கூறியதாவது: கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையம், செயின்ட் தாமஸ் மவுண்ட் மற்றும் அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகள் தங்கள் வாகனங்களை நிறுத்த வேண்டாம்.

மெட்ரோ நிலையங்களுக்கு வருபவர்களின் வாகனங்களுக்கு பார்க்கிங் அனுமதிக்க வேண்டியதில்லை. மீறி வாகனங்களை நிறுத்த வரும் பயணிகளிடம் மழையால் வாகனங்களுக்கு ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் நிர்வாகம் பொறுப்பேற்காது என்பதை தெரிவித்து அதற்கு ஒப்புக்கொண்டால் மட்டும் வாகனங்களை நிறுத்த அனுமதிக்கலாம். அவ்வாறு அனுமதிக்கும் வாகனங்களில் பதிவு எண், உரிமையாளரின் கைப்பேசி எண் ஆகியவற்றை பதிவு செய்து கொள்ள வேண்டும் என சுற்றிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* மெட்ரோ ரயில் உதவி எண்கள் அறிவிப்பு
சென்னை மெட்ரோ ரயில்களில் பயணிகளுக்கு உதவி தேவைப்படின் 1800 425 1515 என்ற எண்ணில் அழைத்து தெரிவிக்கலாம். அதேபோல், மகளிர் தங்கள் உதவிக்கு 155370 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

முன்னெச்சரிக்கை தகவல்கள் சில…
* கோயம்பேடு, பி-ரோட்டில் தண்ணீர் தேங்கியுள்ளதால், பயணிகள் கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தை பூந்தமல்லி நெடுங்சாலை, லேண்ட்மார்க் – ரோகினி தியேட்டர் பக்கத்திலிருந்து புட்ஓவர் பிரிட்ஜ் வழியாக பயன்படுத்தவும்.

* மத்திய மெட்ரோ நிலையத்தில் பி-1 நுழைவாயிலில் பூங்கா பக்க நுழைவு படிக்கட்டு மூடப்பட்டு உள்ளது.

* செயின்ட் தாமஸ் மவுண்ட் மெட்ரோ ரயில் நிலையத்தை சுற்றி தண்ணீர் தேங்கியுள்ளதால் நுழைவு மூடப்பட்டுள்ளது. புறநகர் ரயில் நிலையம் வழியாக உள்ள நடைபாதை மேம்பால வழியை பயன்படுத்தி மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வரலாம்.

* சாலை வழியாக செல்லும் பயணிகள் ஆலந்தூர் மெட்ரோ நிலையத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

The post மெட்ரோ ரயில் பயணிகள் கவனத்துக்கு…தண்ணீர் தேங்கும் பகுதியில் நுழைய வேண்டாம், பார்க்கிங்கில் வாகனம் நிறுத்த அனுமதி கிடையாது appeared first on Dinakaran.

Read Entire Article