‘மெட்ரிகுலேஷன் பாடத்திட்ட தரத்தை உயர்த்தினால் நீட் தேர்வில் எளிதாக தேர்ச்சி பெறலாம்’ - தம்பிதுரை

5 hours ago 2

கிருஷ்ணகிரி: சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இணையாக மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் பாடத்திட்டத்தை தரமாக அரசு உயர்த்தினால் தமிழக மாணவர்கள் எளிதாக நீட் தேர்வுகளில் தேர்ச்சி பெற முடியும், என பர்கூரில் அதிமுக எம்.பி தம்பிதுரை கூறியுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுக கொள்கை பரப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான மு.தம்பிதுரை செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாநில பட்டியலில் இருந்த கல்வியை, இந்திராகாந்தி ஆட்சியில் தான் மத்திய அரசு பொதுப்பட்டியலுக்கு மாற்றியது. அதனை, இன்றுவரை மாநில பட்டியலுக்கு கொண்டு வர முடியவில்லை. இதன் காரணமாக தான் மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை கொண்டு வருகிறது.

Read Entire Article