மெக்சிகோ முன்னாள் அமைச்சருக்கு 38 ஆண்டுகள் சிறை

7 months ago 39
மெக்சிகோ முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜெனாரோ கார்சியா லூனாவுக்கு அமெரிக்காவின் புரூக்ளின் நீதிமன்றம், 38 ஆண்டுகளுக்கு மேலான சிறைத்தண்டனையும், இந்திய மதிப்பில் 17 கோடி ரூபாய் அபராதமும் விதித்துள்ளது. போதைப்பொருள் கடத்தல்காரர்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாயை லஞ்சமாகப் பெற்றதாக அவர் மீது வழக்கு நடைபெற்றது. தவிர, பல்வேறு சதித் திட்டங்களில் ஈடுபட்டது, நாட்டில் போதைப்பொருள் விற்பனையை ஊக்குவித்தது, போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளும் அவர் மீது சுமத்தப்பட்டன. கார்சியா லூனாவின் நடவடிக்கைகளால் அமெரிக்கா மற்றும் மெக்சிகோவில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டது. 
Read Entire Article