மெக்சிகோ கடற்கரையில் கரை ஒதுங்கிய டூம்ஸ்டே மீனால் மக்கள் அச்சம்

8 hours ago 1

மெக்சிகோ,

கடலின் அடிப்பகுதியில் சுமார் ஆயிரம் அடி ஆழத்தில் வசிக்கக் கூடிய டூம்ஸ்டே மீன் (doomsday fish) ஒன்று மெக்சிகோ கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளது. வழக்கமான மீன்களை போல இன்றி நீளமான உடல்வாகு மற்றும் மிளிரும் தன்மை கொண்ட மீனாகும்.

இந்த மீன் திடீரென கடலோரத்தில் கரை ஒதுங்கிருப்பது அபாயமிக்க ஒன்றாக சொல்லப்படுகிறது. ஏனெனில் பேரழிவு நெருங்கும்போது மட்டுமே இந்த மீன்கள் ஆழ்கடல் பகுதியை விட்டு வெளியே வரும் என புராணக்கதைகள் கூறுவதாகப் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

கடந்த 2011ம் ஆண்டு ஜப்பான் கடற்கரையில் 20-க்கும் மேற்பட்ட டூம்ஸ்டே மீன்கள் கரை ஒதுங்கின. அதே ஆண்டு ஜப்பானில் மிகப்பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ஜப்பான் வரலாற்றில் மிக மோசமான பேரழிவை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

மெக்சிகோ கடற்கரையில் கரை ஒதுங்கிய டூம்ஸ்டே மீனால் மக்கள் அச்சம்.

"பேரழிவு நெருங்கும்போது மட்டுமே கடலின் ஆழத்திலிருந்து இவ்வகை மீன்கள் வெளிவருகிறது" என புராணக்கதைகள் கூறுவதாகப் பலரும் சமூக வலைதளங்களில் பதிவு.#doomsdayfish #Mexico #ThanthiTV pic.twitter.com/VAnqJuwNYf

— Thanthi TV (@ThanthiTV) February 22, 2025

Read Entire Article