
புதுடெல்லி,
டெல்லியில் நடைபெற்ற 12-வது சர்வதேச சுகாதார மாநாட்டின் நிறைவு அமர்வில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"தற்போதைய காலகட்டத்தில் சுகாதாரம் என்பது அடிப்படை தேவை. அது ஆடம்பரம் அல்ல. கொரோனா காலகட்டம் நமக்கு மிகப்பெரிய பாடத்தை கற்றுக்கொடுத்தது. நாம் அடுத்த சவால்களுக்கு தயாராக இருக்க வேண்டும்.
சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்தி, நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இதில் சர்வதேச ஒத்துழைப்பு தேவை என்று நான் உலக நாடுகளிடம் கூறிக்கொள்ள விரும்புகிறேன்."
இவ்வாறு ஜெய்சங்கர் தெரிவித்தார்.