மூன்று கொலை வழக்குகளில் கடந்த 6 வருடங்களாக தலைமறைவாக இருந்த ரவுடியை சென்னை, பனந்தோப்பு ரயில்வே காலனி பகுதியில் ங்ங்ங்2Gங்ங்க்க் பிடித்ததாக ஓட்டேரி காவல் நிலைய போலீசார் தெரிவித்தனர்.
ஹரி என்ற அறிவழகன் மீது கொலை வழக்குகள் உள்பட 12 வழக்குகள் உள்ள நிலையில், பனந்தோப்பு ரயில்வே காலனி பகுதியில் நண்பருக்காக அவர் காத்திருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்று ஹரியை சுற்றி வளைத்தபோது அவர் தப்பிக்க முயற்சித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
தன்னிடம் இருந்த கள்ளத்துப்பாக்கியால் ஹரி சுட முயற்சித்தபோது, உதவி ஆய்வாளர் பிரேம்குமார் தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டதில் அவரது காலில் குண்டடி பட்டதாகவும், பீகாரில் இருந்து கள்ள துப்பாக்கி வந்ததாக ஹரி வாக்குமூலம் அளித்தார் எனவும் போலீசார் தெரிவித்தனர்.