“பெண் விமானி சிறைபிடிக்கப்பட்டதாக பாக். வதந்தி”, “S-400 சுதர்சன் சக்ராவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” : ஒன்றிய அரசு விளக்கம்

4 hours ago 1

டெல்லி : எஸ் 400 சுதர்சன் சக்ரா வான் பாதுகாப்பு அமைப்பை பாகிஸ்தான் தாக்கி அழித்துவிட்டதாக பரவும் செய்திகள் போலியானவை என இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜம்முவில் நேற்று முன்தினம் இரவு பாகிஸ்தான் ராணுவத்தினர் டிரோன் தாக்குதல் நடத்தினர். பாகிஸ்தானின் டிரோன் தாக்குதலை எஸ்400 வகை ஏவுகணை மூலம் இந்திய ராணுவத்தினர் வெற்றிகரமாக முறியடித்தனர். ஆசிய கண்டத்தில் இந்தியாவிடம் மட்டுமே எஸ் 400 வான் பாதுகாப்பு அமைப்பு உள்ளது. எஸ் 400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பானது ரஷ்யாவில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டதாகும்.

400 கிலோ மீட்டர் ரேஞ்ச் வரை பாய்ந்து, எதிரிகளின் ஏவுகணைகளை இடைமறித்து தாக்கக்கூடிய வல்லமையை எஸ் 400 ஏவுகணை அமைப்பு கொண்டுள்ளது. இந்த நிலையில் இந்தியாவின் எஸ் 400 வான் பாதுகாப்பு அமைப்பை பாகிஸ்தான் தாக்கி அழித்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவின. இது குறித்து இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த செய்திகளில் சிறிதளவும் உண்மை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தகவலை பாகிஸ்தான் ஆதரவு அமைப்புகளால் திட்டமிட்டு பரப்பப்படும் பொய் செய்திகள் என்றும் இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே போல், இந்திய விமானப்படை பெண் விமானி சிறைபிடிக்கப்பட்டதாக பாக். வதந்தி பரப்புவதாக ஒன்றிய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. பெண் விமானி ஷிவானி சிங் சிறைபிடிக்கப்பட்டதாக வெளியான தகவல் போலியானது என்றும் ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது.

The post “பெண் விமானி சிறைபிடிக்கப்பட்டதாக பாக். வதந்தி”, “S-400 சுதர்சன் சக்ராவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” : ஒன்றிய அரசு விளக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article