நாசரேத், ஜன.8: மூக்குப்பீறியில் நடந்த புத்தாண்டு ஆசீர்வாத கூட்டத்தில் திரளானோர் பங்கேற்றனர். நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறியில் இயேசுவின் வல்லமை ஜெப ஊழியம் சார்பில் புத்தாண்டு வாக்குத்தத்த ஆசீர்வாத கூட்டம் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடந்தது. மூக்குப்பீறி பெனிட்டா தேவகிருபை மற்றும் வல்லமையின் குழுவினர் பாடல்களோடு ஆராதனை நடத்தினர். இயேசுவின் வல்லமை ஜெப ஊழிய பொறுப்பாளர் ஊழியர் புஷ்பா ராஜன் புத்தாண்டு வாக்குத்தத்த செய்தி கொடுத்தார். குடும்ப ஆசீர்வாதத்திற்காகவும் , வியாதியஸ்தர்களுக்காகவும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.இதையடுத்து அன்பின் விருந்து நிகழ்ச்சி நடந்தது. இதில் நாசரேத், மூக்குப்பீறி, பிரகாசபுரம், கடையனோடை, குளத்துக்குடியிருப்பு, ஒய்யான்குடி மற்றும் அதன் சுற்று வட்டார கிராம மக்கள் என திரளானோர் கலந்துகொண்டனர்.
The post மூக்குப்பீறியில் புத்தாண்டு ஆசீர்வாத கூட்டம் appeared first on Dinakaran.