முழு கொள்ளளவை நெருங்கும் செம்பரம்பாக்கம் ஏரி; நீர் திறப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை

3 hours ago 2

சென்னை,

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் தென்தமிழக கடலோரப் பகுதியை நோக்கி நகரும் எனவும், இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைகள், ஏரிகள் ஆகியவை வேகமாக நிரம்பி வருகின்றன.

அந்த வகையில் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 7 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் முழு கொள்ளளவான 24 அடியில், தற்போது 22 அடி உயரம் வரை தண்ணீர் நிரம்பியுள்ளது. நாளை காலைக்குள் செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்ட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில், உபரிநீர் திறப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article