ேகாவை: மதுரையில் நேற்று முன்தினம் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் ஒளிபரப்பப்பட்ட வீடியோவில் ‘அதர்மம் ஒழிக்க…’ என்ற குரல் ஒலிக்க அண்ணா, பெரியார் படங்கள் காட்டப்பட்டன. இந்த வீடியோ பெரியார் ஆதரவாளர்கள், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி கோவை விமான நிலையத்தில் நேற்று பேட்டியளித்த பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடம், ‘‘அண்ணா குறித்து மாநாட்டில் வீடியோ வெளியிட்டது வருத்தம் அளிப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்து உள்ளாரே?’’ என நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், ‘‘அப்படி அவர் கூறியிருக்கிறார்’’ என்றார். தொடர்ந்து, ‘‘அதிமுக முன்னாள் அமைச்சர் தெரிவித்த வருத்தத்தை பாஜ சாதாரணமாக எடுத்து கொண்டதா?’’ என்று கேட்டபோது, ‘‘அந்த வீடியோவை நான் இன்னும் பார்க்கவில்லை. அதை பார்த்துவிட்டு கண்டிப்பாக பேசுகிறேன்’’ என்றார்.
‘‘அதிமுக முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் திராவிடத்தை ஒழிப்போம் என வீடியோ வெளியிடுவது சரியானதா?’’ என்று கேட்டபோது, ‘‘நிகழ்ச்சி முடிந்தவுடன் இங்கு வந்து விட்டோம். அது என்னவென்று பார்த்துவிட்டு பதில் சொல்கிறேன்’’ என்று மழுப்பலாக பதில் அளித்தார். ஆர்.எஸ்.எஸ் நிகழ்வில் அதிமுகவினர் கலந்துகொண்டது தொடர்பான கேள்விக்கும் பதில் அளிக்காமல் சென்றார்.
The post முருகர் மாநாட்டில் அண்ணா, பெரியாரை விமர்சித்து வீடியோ; நான் பார்க்கவே இல்லை: நயினார் மழுப்பல் appeared first on Dinakaran.