சேந்தமங்கலம், ஜூலை 6: சேந்தமங்கலம் வட்டார வேளாண்மை மற்றும் சார்பில், ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க திட்டம் தொடக்க விழா, பொம்மசமுத்திரம் ஊராட்சியில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் மலர்கொடி தலைமை வகித்தார். தோட்டக்கலை உதவி இயக்குனர் திவ்யா முன்னிலை வகித்தார். விழாவில் வட்டார அட்மா குழு தலைவர் அசோக்குமார் கலந்துகொண்டு, ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க திட்டத்தை தொடங்கி வைத்து, விவசாயிகளுக்கு மரத்துவரை, காராமணி, அவரை, தக்காளி கத்திரிக்காய் மிளகாய் வெண்டைக்காய் கீரை கொத்தவரை உள்ளிட்ட விதைகள், பழச்செடிகள் கொய்யா, பப்பாளி, எலுமிச்சை செடிகள் அடங்கிய தொகுப்புகள், வேளாண் இடுபொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், ஊராட்சி ஆலோசனை குழு தலைவர் செந்தில்குமார், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் சித்ரா, வேளாண் அலுவலர் அருள் ராணி, வேளாண்மை உதவி அலுவலர்கள், தோட்டக்கலை துறை உதவி அலுவலர்கள் தொழில்நுட்ப மேலாளர்கள் கலந்து கொண்டனர்.
The post ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் திட்டம் தொடக்கம் appeared first on Dinakaran.