முரசொலி செல்வம் இல்லத்தில் அவரது படத்துக்கு கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் மலர் தூவி மரியாதை: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆறுதல் கூறினார்

3 months ago 12

சென்னை: முரசொலி செல்வம் மறைவை தொடர்ந்து அவரது இல்லத்திற்கு நேரில் சென்று அவரின் படத்திற்கு கவர்னர் சி.பி.ராதாகிருஷணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் அவர் ஆறுதல் கூறினார். முன்னாள் முதல்வர் கலைஞரின் மருமகனும், முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் தம்பியும், தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தங்கை செல்வியின் கணவர் முரசொலி செல்வம்(84). இவர் கடந்த 10ம் தேதி பெங்களூரில் காலமானார். அவரது உடல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் கடந்த 11ம் தேதி தகனம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், முரசொலி செல்வத்தின் சென்னை கோபாலபுரம் இல்லத்திற்கு நேற்று நேரில் சென்று, முரசொலி செல்வம் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், செல்வி செல்வம் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். சிபி ராதாகிருஷ்ணனுடன் பாஜ சட்டமன்ற கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜ துணை தலைவர் சக்ரவர்திதி ஆகியோர் உடன் வந்திருந்தனர்.

The post முரசொலி செல்வம் இல்லத்தில் அவரது படத்துக்கு கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் மலர் தூவி மரியாதை: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆறுதல் கூறினார் appeared first on Dinakaran.

Read Entire Article