பணியிடங்கள் விவரம்:
i) உதவி மின் பொறியாளர்: 2 இடங்கள். சம்பளம்: ரூ.16,600- 52.400. தகுதி: எலக்ட்ரிக்கல்/வயர்மேன் டிரேடில் ஐடிஐ படிப்பை முடித்து ‘ஹெச்’ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
ii) தொழில்நுட்ப உதவியாளர்: 1 இடம். சம்பளம்: ரூ.20,600-65,500. தகுதி: எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் இன்ஜினியரிங் பாடத்தில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
iii) பிளம்பர்: 4 இடங்கள். சம்பளம்: ரூ.18,000- 56,900. தகுதி: பிளம்பிங் டிரேடில் ஐடிஐ படிப்பை முடித்து 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
iv) தலைமை ஆசிரியர்: 1 இடம். சம்பளம்: ரூ.36,700- 1,16,200. தகுதி: தமிழில் முதுநிலை பட்டம் பெற்று பி.எட்., படித்து, மேல்நிலைப்பள்ளியில் குறைந்தது 5 ஆண்டுகள் தலைமை ஆசிரியராக பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
v) தேவார ஆசிரியர்: 1 இடம். சம்பளம்: ரூ.35,400- 1,12,400. தகுதி: ஆகம பள்ளி அல்லது தேவார பாடசாலையில் 3 வருட ஆசிரியர் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
vi) சங்கீத இசை ஆசிரியர்: 1 இடம். சம்பளம்: ரூ.35,400- 1,12,400. தகுதி: குரலிசை ஆசிரியர் படிப்பில் 3 வருட பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.அனைத்து பணிகளுக்கும் வயது: 18 முதல் 45க்குள். விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.hrce.tn.gov.in அல்லது www.annamalaiyar.hrce.tn.gov.in என்ற இணையதளங்களை பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 28.02.2025.
The post திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் பல்வேறு பணிகள் appeared first on Dinakaran.