மும்பையில் ஒரு மாதத்திற்கு பட்டாசு வெடிக்க தடை

4 hours ago 1

மும்பை,

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் தாக்குதல் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த சூழலில், மராட்டிய மாநிலத்தின் தலைநகர் மும்பையில் ஒரு மாதத்திற்கு பட்டாசு வெடிக்க தடை விதித்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது. இதன்படி மே 11-ந்தேதி(இன்று) முதல் ஜூன் 9-ந்தேதி வரை மும்பை பெருநகர எல்லைக்குள் ராக்கெட் உள்பட எந்த வகையான பட்டாசுகளையும் வெடிக்க தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Read Entire Article