மும்பை விமான நிலையத்தில் ரூ.1.25 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் - இருவர் கைது

3 months ago 20

மும்பை,

மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்திற்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், துபாயில் இருந்து மும்பை வந்திறங்கிய பயணிகளிடம் விமான நிலைய அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது விமான நிலைய ஊழியர் மற்றும் ஒரு பயணி ஆகிய இருவரும் சந்தேகத்திற்குரிய வகையில் நடந்து கொண்டதை அதிகாரிகள் கவனித்தனர். அந்த இருவரையும் தனியாக அழைத்து தீவிர சோதனை செய்தனர். அப்போது அந்த பயணி தனது உடலில் 1.725 கிலோ தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ.1.25 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், கடத்தலில் ஈடுபட்ட பயணியையும், அதற்கு உதவியாக இருந்த விமான நிலைய ஊழியரையும் கைது செய்தனர்.

Read Entire Article