
தெலுங்கு சங்க நிகழ்ச்சியான தானா 2025 அமெரிக்காவில் கொண்டாடப்பட்டது. விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகை சமந்தா கலந்து கொண்டு பேசுகையில், அமெரிக்காவில் உள்ள தெலுங்கு மக்கள் என் மீது காட்டும் அன்புக்கும், போற்றுதலுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்களுக்கு இங்கு நின்று நன்றி சொல்ல எனக்கு 15 ஆண்டுகள் ஆகிவிட்டது. இத்தனை வருடங்களாக என்னால் வெளிப்படுத்த முடியாத நன்றியை இப்போது வெளிப்படுத்த விரும்புகிறேன்.
என் சினிமா ஆரம்பகால கட்டத்தில் இருந்து நீங்கள் என்னை உங்கள் சொந்த மகளைப் போலவே நடத்தினீர்கள். என்னுடைய சுபம் படத்திற்கு அமெரிக்க பார்வையாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது.
வாழ்க்கையில் நான் எந்த முடிவை எடுத்தாலும் முதலில் நமது தெலுங்கு பார்வையாளர்கள் அதை விரும்புவார்களா? இல்லையா என்பதை பற்றி நன்றாக யோசிப்பேன். நான் நடித்த ஓ பேபி படம் அமெரிக்காவில் ஒரு மில்லியன் டாலர்களை வசூலித்தது எனக்கு வியப்பாக இருந்தது.
எவ்வளவு தொலைவில் இருந்தாலும் என் இதயத்திற்கு மிக நெருக்கமானவர்கள் நீங்கள் என்று கூறிய சமந்தா உணர்ச்சி பெருக்கில் மேடையில் கண்ணீர் விட்டு அழுதார். அவர் அழுவதை கண்ட–தும் நிகழ்ச்சி தொகுப்பாளரான சுமா ஓடி வந்து அவரது கண்ணீரை துடைத்தார். இந்த வீடியோ காட்சிகள் வைரலாக பரவி வருகிறது.