
மும்பை,
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவியது.
இதனையடுத்து பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். இதனை இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரியும், பாக். துணை பிரதமரும் உறுதிப்படுத்தினார். இருநாட்டு தலைவர்களின் அறிவிப்புகளைத் தொடர்ந்து கடந்த 4 நாட்களாக நீடித்து வந்த தாக்குதல் முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில் மராட்டிய மாநிலம் பிரஹன் மும்பை எல்லைக்குள் பட்டாசுகள் மற்றும் ராக்கெட்டுகளைப் பயன்படுத்துவற்கு மும்பை காவல்துறை தடை விதித்துள்ளது. அந்த உத்தரவின்படி, மே 11, 2025 (இன்று) முதல் ஜூன் 9, 2025 வரை எந்தவொரு நபரும் பிரஹன் மும்பை எல்லைக்குள் எந்த இடத்திலும் பட்டாசுகளை வெடிக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.