டெல்லி : முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்குள் ரத்து செய்யும் பொழுது அதற்கான தொகை திருப்பி வழங்கப்படாது என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கு பொது மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ரயிலில் பயணிப்பதற்காக இதுவரை செய்து வந்த டிக்கெட் முன்பதிவு நடைமுறைகளிலும் மற்ற வீதிகளிலும் மொத்தமாக இந்திய ரயில்வே மாற்றத்தை கொண்டு வந்துளளது. அதன்படி ஒரு பயனர் ஐடியில் இருந்து, ஒரு நாளைக்கு 2 தட்கல் டிக்கெட்டுகள் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். மொபைலிலோ அல்லது இணைய சேவை மூலமாகவோ ரயில் டிக்கெட் புக் செய்பவர்கள் இனி ஓடிபியை பயன்படுத்தியே புக் செய்ய முடியும்.
காத்திருப்பு பட்டியலில் உள்ள டிக்கெட்டுகளுக்கு முழு பணத்தை திரும்பப் பெற்று கொள்ளலாம் என்றும் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பாக டிக்கெட்டை ரத்து செய்தால் 75% பணம் திரும்ப கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 24 முதல் 48 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால், 50% பணம் திரும்ப கிடைக்கும், அதே நேரத்தில் ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால் எந்த தொகையும் திரும்ப கிடைக்காது என்றும் ரயில்வே அறிவித்துள்ளது. இந்த முக்கிய மாற்றங்கள் மே 1 முதல் அமலுக்கு வந்துள்ளன. குறைந்த கட்டணம் என்கின்ற காரணத்தினால் ஏழை மக்கள் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் ரயில்வே துறையின் இந்த அறிவிப்பால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே இந்த அறிவிப்புகளை ரயில்வே துறை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
The post முன்பதிவு ரயில் டிக்கெட்டை கடைசி 24 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால் பணம் திரும்ப வழங்கப்படாது : மே 1 முதல் புதிய நடைமுறைகள் அமல்!! appeared first on Dinakaran.