சென்னை: சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அவசர கால கட்டுப்பாட்டு அறையை நேற்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் அளித்த பேட்டி: மதியம் ஒரு மணி வரை வீசிய அதிவேக காற்றின் காரணமாக 27 மரங்கள் விழுந்துள்ளன. அவை அனைத்தும் உடனடியாக அகற்றப்பட்டன. நிவாரண மையங்களுக்கு உணவு வழங்க 120 சமையல் கூடங்கள் தயார் நிலையில் உள்ளன. இதுவரை தாழ்வான பகுதிகளில் இருந்து 193 பேர் அழைத்து வரப்பட்டு, 8 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று காலை உணவு 8500 பேருக்கும், மதிய உணவு 2 லட்சத்து 23 ஆயிரத்து 700 பேருக்கும், மொத்தமாக 2 லட்சத்து 32 ஆயிரத்து 200 பேருக்கும் உணவு வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 386 அம்மா உணவகங்களிலும் இலவசமாக உணவு வழங்கப்படுகிறது. இவ்வளவு மழை பெய்தும் பாதிப்புகள் குறைவு தான். கடந்த காலங்களில் இயற்கை சீற்றங்களின் போது ஒற்றுமையுடன் செயல்பட்டு மீண்டு வந்திருக்கிறோம். இப்போதும் அதேபோன்று செயல்பட்டு மீண்டு வருவோம். இவ்வாறு தெரிவித்தார்.
The post முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மழை பாதிப்பு குறைந்தது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி appeared first on Dinakaran.