முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் மகனை கட்டிபோட்டு நகை கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

1 week ago 2

ஸ்ரீபெரும்புதூர்: தாம்பரம் அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் மகனை கட்டிபோட்டு நகையினை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம், சோமங்கலம் அருகே மலைப்பட்டு, பழவத்தம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராதாகிருஷ்ணன். இவரது மகன் ராஜேஷ் (40). சொந்தமாக டிராவல்ஸ் தொழில் நடத்தி வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்தபோது, காரில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர், வீட்டின் உள்ளே நுழைந்தனர்.

இதையடுத்து, கத்தியால் ராஜேஷை சரமாரியாக தாக்கி, அவர் அணிந்திருந்து 5 பவுன் தங்க செயினை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த சோமங்கலம் போலீசார், காயமடைந்த ராஜேஷை மீட்டு சிகிச்சைக்காக படப்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புகாரின்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், கத்தியால் தாக்கி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

The post முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் மகனை கட்டிபோட்டு நகை கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை appeared first on Dinakaran.

Read Entire Article