
சென்னை,
அடிக்கடி பணிக்கு வராமல், முன் அறிவிப்பின்றி விடுப்பு எடுக்கும் ஓட்டுநர், நடத்துனர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு போக்குவரத்து துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தினசரி இயக்க வேண்டிய பேருந்துகளுக்கு, ஒரு நாள் முன்னதாக கண்ட்ரோல் சார்ட்டில் (Control Chart) ஓட்டுனர், நடத்துனர்களிடம் கையொப்பம் பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாலை 5 மணிக்குள் விடுப்பு தெரிவிக்கும் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து பேருந்துகளை இயக்க வேண்டும் என்றும் முகூர்த்த நாட்களில் அனைத்து பேருந்துகளையும் இயக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.