
சென்னை ,
நெருங்கிய உறவினர்களின் இறுதிச் சடங்கில் கைதிகள் பங்கேற்க சிறைத்துறை அதிகாரிகளே அனுமதி வழங்கும் வகையில் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும் என்று தமிழக உள்துறை செயலாளருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தாயின் இறுதிச் சடங்கில் பங்கேற்க புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது சகோதரனுக்கு விடுப்பு கோரி சகோதரி மனு அளித்துள்ளார்.
இந்த மனு மீதான விசாரணையின்போது, நெருங்கிய உறவினர்களின் இறுதிச் சடங்கில் கைதிகள் பங்கேற்க சிறைத்துறை அதிகாரிகளே அனுமதி வழங்கும் வகையில் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும் என்று தமிழக உள்துறை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.