
வெல்லிங்டன்,
நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு டி20 தொடர் ஜிம்பாப்ப்வேயில் நடைபெற உள்ளது. இந்த தொடர் வரும் 14ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடும்.
இந்த தொடருக்கான நியூசிலாந்து அணி சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் அதிரடி ஆட்டக்காரரான பின் ஆலென் இடம் பிடித்திருந்தார். தற்போது மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் சான் பிரான்சிஸ்கோ அணிக்காக ஆடி வரும் பின் ஆலென் அங்கு காயத்தை சந்தித்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக ஜிம்பாப்வேயில் நடைபெற உள்ள முத்தரப்பு டி20 தொடரில் இருந்து பின் ஆலென் விலகி உள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அவருக்கு பதிலான மாற்று வீரர் விரைவில் அறிவிக்கப்படுவார் என தெரிவித்துள்ளது.