
திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சுத்தமல்லி சப்வே ரெயில்வே பாலம் அருகே சந்தேகப்படும்படி பைக்கில் நின்று கொண்டிருந்த பேட்டை, சத்யாநகரைச் சேர்ந்த கனகராஜ் (வயது 25) என்பவரை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர் அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய 25 கிராம் கஞ்சாவை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து மேற்சொன்ன சப்-இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு கனகராஜை நேற்று கைது செய்தார். மேலும் அவரிடமிருந்து 25 கிராம் கஞ்சாவையும், பைக்கையும் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தார்.