
சென்னை,
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் அனுஷ்கா ஷெட்டி. இவர் 'அருந்ததி' என்ற பேய் படத்தில் நடித்து பிரபலமானார். இவரின் சினிமா வாழ்க்கையில் 'பாகுபலி' முக்கிய படமாக அமைந்தது. இந்த நிலையில் இவர் தற்போது கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கத்தில் தனது 50-வது படமான "காதி" என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
போதைப்பொருள் கடத்தலை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் விக்ரம் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் விரைவில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை அனுஷ்கா தனது முதல் காதல் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அதாவது, " நான் ஆறாம் வகுப்பு படித்த போது, ஒரு பையன் என்னிடம் வந்து நான் உன்னை காதலிக்கிறேன் என தெரிவித்தான். எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. உயிருக்கு உயிராக நேசிப்பதாக தெரிவித்தான். அந்த வயதில் அது சரியா தவறா என்பது கூட புரியவில்லை. நானும் சரி என்று அந்த காதலை ஏற்றுக்கொண்டேன். ஆனால், அந்த நினைவுகள் எப்போதும் இனிமை தான். வாழ்வில் மறக்க முடியாத ஒன்றாக இருக்கிறது" என தெரிவித்துள்ளார்.