லாகூர்,
பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய 3 நாடுகள் கலந்து கொள்ளும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த போட்டி இன்று தொடங்கி 14-ந் தேதி வரை நடைபெறுகிறது.
இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். முத்தரப்பு ஒருநாள் தொடரில், லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் முதலாவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
இதையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாசில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் பிளேயிங் லெவன்: பகார் ஜமான், முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர், கேப்டன்), பாபர் அசாம், குஷ்தில் ஷா, கம்ரான் குலாம், சல்மான் ஆஹா, தையப் தாஹீர், ஷாகீன் அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவூப், அப்ரார் அகமது.
நியூசிலாந்து பிளேயிங் லெவன்: ரச்சின் ரவீந்திரா, வில் யங், கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல், டாம் லாதம் (விக்கெட் கீப்பர்), க்ளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சாண்ட்னெர் (கேப்டன்), மேட் ஹென்றி, பென் சீயர்ஸ், வில்லியம் ஓ ரூர்க்.