சுபமுகூர்த்தம், வார இறுதி நாட்களை ஒட்டி தமிழகம் முழுவதும் 1,739 சிறப்பு பஸ்கள் இயக்கம்

4 hours ago 2

சென்னை,

அரசு விரைவு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களையொட்டி சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர்,, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) 570 பஸ்களும், 17-ந் தேதி (சனிக்கிழமை) 605 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 16-ந் தேதி வெள்ளிக்கிழமை 100 பஸ்களும், 17-ந் தேதி சனிக்கிழமை 90 பஸ்களும் மேற்கூறிய இடங்களில் இருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 250 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மாதவரத்தில் இருந்து 16-ந் தேதி 24 பஸ்களும், 17-ந் தேதி 100 பஸ்களும் சிறப்பு பஸ்களாக இயக்கப்படுகிறது.

மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article