முதுமலை புலிகள் காப்பகத்தில் யானை பாகன்களுக்கான வீடுகள்: முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்

5 hours ago 4

முதுமலை: நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் பணிபுரியும் 44 பாகன்கள் மற்றும் உதவியாளர்களுக்கு ரூ.5 கோடியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள வீடுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

ஊட்டிக்கு ஐந்து நாட்கள் சுற்றுப்பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் நேற்று வந்தார். கல்லட்டி மலைப் பாதை வழியாக வந்த அவருக்கு, மாவனல்லா பகுதியில் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வழியில் காரிலிருந்து இறங்கிய முதல்வர், அங்கு கூடியிருந்த பொதுமக்களுடன் கை குலுக்கி, செல்ஃபி எடுத்துக் கொண்டார். அதேபோல, மசினகுடியிலும் திரளான பொதுமக்கள் முதல்வருக்கு வரவேற்பு கொடுத்தனர்.

Read Entire Article