பஞ்சாப்: தவறுதலாக பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்த BSF வீரர் பூர்னப் குமார் ஷா இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். ஏப்ரல் 23ம் தேதியன்று பஞ்சாப்பில் பாதுகாப்பு பணியில் இருந்த பூர்னப் குமார் ஷா தவறுதலாக பாகிஸ்தானிற்குள் நுழைந்தார். 20 நாட்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பலனாக பூர்ணப் குமாரை பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவிடம் ஒப்படைத்தது. வாகா அட்டாரி எல்லை வழியாக BSF வீரர் பூர்னப் குமார் ஷா இந்தியாவிற்குள் அனுப்பி வைக்கப்பட்டார்.
The post தவறுதலாக பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்த BSF வீரர் பூர்னப் குமார் ஷா இந்தியாவிடம் ஒப்படைப்பு!! appeared first on Dinakaran.