ஆன்மீக தகவல்கள்

6 hours ago 4

திருத்துருத்தி: ஊரின் மையத்தில் உள்ள காளி தினமும் காவிரியில் நீராடி மலர்கொண்டு அன்புடன் அர்ச்சித்த போது இறைவன் காளிக்கு ‘ஓம்’ என்று பிரணவத்தின் பொருளை அருளச் செய்தது. காளி தலை சாய்த்து கேட்கும் சிறிய கல்மேனி உள்ளது.தேப்பெருமா நல்லூர் (திருநாகேஸ்வரம் அருகில்): விஸ்வநாதசுவாமி கோயிலில் அன்னதான தட்சிணா மூர்த்திக்கு காலசந்தி பூஜையில் பழைய அன்னம் நிவேதம் செய்வது.

காஞ்சி மறை நூபுரம்: வேதசிலம்பு: இங்கு யுகமுடிவில் வேதங்கள் வழிபட்டு சிவனுக்கு கால் சிலம்பாயின. பிரம்ம தேவனுக்கு சிவன் தூக்கிய காலை அசைத்து ஒலி மூலம் வேதங்களை உபதேசித்த தலம்.

ரிஷிவந்தியம்: அர்த்தனாரீஸ்வரர் ஆலயத்தில் இந்திரன் அமைத்த லிங்கத்தில் தேன் அபிஷேகம் செய்யும் போது மட்டும் பாணபகுதியில் அம்பிகை நிழலுருவம் தோன்றுகிறது. (அர்த்தஜாம பூஜை)

மண்டோதரி: ராவணன் மனைவி ஓயாது ஐந்தெழுத்தை ஓதும் மகாசிவபக்தி உடையவள். தாம் எப்போது விரும்புகின்றாளோ அப்போது ஈசன் தனக்கு காட்சி அளிக்க வரம் பெற்றிருந்தாள்.

மடிசங்கு: வலம்புரிசங்கை விட 1000 மடங்கு உயர்ந்த மடிசங்கு செங்கை மாவட்டத்தில் பெரும்பேறு தலத்தில் உள்ள இதை பார்வதி தேவியாக போற்றுவர். (வலம்புரி சங்கு – திருமகளாக).
உருத்திரபாசுபதம்: ஈசன் முருகனுக்கு, கந்தனும் சிவனும் மட்டும் ஏந்தவும், மற்றவர்களால் தொடவும் முடியாத உயர்ந்த ஆயுதமான பாசுபதத்தை விட பல மடங்கு வலிமை கொண்டதை அளித்தார்.

திரையில் பீமருத்திரர்: திருமால் வாமன அவதாரம் செய்து மிக சிவ பக்தனை மகாபலியை பாதாளம் அழுத்திய பாவம் தீர லிங்கம் அமைத்து பூஜையும், அதை காக்க முன்புறம் திரையில் பீமசங்கராக உருவம் அமைந்து உள்ளது.

பாண்டி கொடுமுடி: அகத்தியர் தழுவி மகிழ்ந்த விரல் அடையாளம் லிங்க திருமேனியில் உள்ளன. இங்கு சிவன் உமா, திருமண காட்சி அகத்தியருக்கு காட்டினார்.

கிணார் (காஞ்சி): மூலஸ்தானத்தில் லிங்கம் பின்னால் சோமாஸ்கந்தர் பெரிய திருவுருவம் உள்ளது. இதில் சிவன் பின்புறம் பிரம்மா, திருமால், கவரி வீசும் ரம்பை உள்ளனர்.

ஆரூர்: தவம் செய்து மகாலட்சுமி- திருமாலை மணந்து லட்சுமீசர், உமை சிவனை வழிபட்டு பார்வதீஸ்வரர் பெயரில் லிங்கம் அமைத்து, சரஸ்வதி பிரம்மனை அடைந்து சரஸ்வதீஸ்வரர் பெயரில் லிங்கம் உள்ளன.

பிரம்மஹத்தி: பிரம்மத்தை உணர்ந்து பரமஞானிகளாக விளங்கும் பெரியோர்களை அவமதித்து அவர்களை துன்புறுத்தி கொன்று விட்டால் கொன்றவர்களை கொடிய அரக்கன்வடிவில் அவர்களை துன்பம் பிடித்து தொடர்ந்து வந்து துன்புறுத்தும்.

பேரூர் (கோவை): திருமாலும் பிரம்மனும் முறையே பட்டிமுனி, கோமுனி பெயரில் தவம் செய்து சிவன் நடனகாட்சி காண்கிறார்கள் (கோமுனி-பசுமுகம்-பிரம்மன்).

மரமும் தெய்வமும்: அரசமரமும் மும்மூர்த்தி வடிவம் விநாயகரோடு தொடர்புடையது. ஆலமரம் சிவன் வடிவம்; பொதுவுடையார் கோயிலில் ஆலமரமே நடராஜராக வழிபாடு. வேம்பு-பராசக்தி வடிவம். வேங்க, கடம்பு-முருகன் வடிவம்.

செடியின் பெயரில் ஊர்: கச்சி நெறிக்காரைக்காடு, காரைக்காட்டில் இந்திரன் தவம் செய்தபோது சுயம்பு லிங்கமாக ஈசன் தோன்றி அருள்புரிதல். சத்யவிரதநாதர் என்பர். இதேபோல் காரைக்கால், காரைக்குடி, காரைசெடியின் பெயரால் உண்டான ஊர்.

காப்பும் கங்கணமும்: காப்பு தான் மேற்கொள்ளும் செயலுக்கு தீய சக்திகளால் உண்டாகும் தொல்லைகளை விலக்க அணிவது கங்கணம்: நாம் எடுக்கும் செயலில் நிலைத்து நின்று அதனை சிறப்புற செய்து முடிக்க மேற்கொள்ளும் உறுதி.

ருத்திரர்கள்: சிவபுராணம் உலகப்படைப்பிற்கு உதவியாக இருக்கும் பொருட்டு பிரம்மனின் நெற்றியில் இருந்து சிவன் பதினோரு ருத்திரர்களை படைத்தார்.

மதில் சிறப்பு பெயர்: மதுரை 1 மதில் காபாலி, திருவண்ணாமலை-வீரராகவன் திருமதில் வாணதிராயன் திருமதில், ஏகம்பமுடையான் திருமதில்.

ஜெயசெல்வி

The post ஆன்மீக தகவல்கள் appeared first on Dinakaran.

Read Entire Article