கூடலூர் : முதுமலை தெப்பக்காடு முகாமில் குடியரசு தின விழா யானைகள் அணிவகுப்பு மரியாதையுடன் நடந்தது. நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்த முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. புலிகள் காப்பக இணை இயக்குனர் வித்யா தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.
அப்போது பாமா, காமாட்சி, கிரி, கிருஷ்ணன் ஆகிய 4 வளர்ப்பு யானைகள் துதிக்கையை தூக்கி பிளிறி தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தியது ஆச்சரியப்பட வைத்தது. இம்முகாமில் நடைபெற்ற குடியரசு தின விழாவை ஏராளமான சுற்றுலா பயணிகளும் தேச பக்தியுடன் பார்த்து ரசித்து தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் வனத்துறையில் பணிபுரியும் மோப்ப நாய் டைகருக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதேபோல கூடலூர் சட்டமன்ற அலுவலர் அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர் பொன்.ஜெயசீலன் தலைமையில் தேசியக்கொடி ஏற்றி குடியரசு தின விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.
The post முதுமலை தெப்பக்காடு முகாமில் குடியரசு தின விழாவில் யானைகள் அணிவகுப்பு மரியாதை appeared first on Dinakaran.