சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மதியம் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. தமிழக சட்டசபை மார்ச் 14ம் தேதி கூடுகிறது. அன்றைய தினம் தமிழக அரசின் 2025-2026ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. மார்ச் 15ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், இன்று (25ம் தேதி) முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
சென்னை தலைமை செயலகத்தில் மதியம் 12 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் துணை முதல்வர், அனைத்து அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர். இந்த கூட்டத்தில் 2025-2026ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், அது தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது. மேலும், தமிழகத்தில் புதிதாக தொடங்கப்படவுள்ள திட்டங்கள், புதிய தொழிற்சாலைகள் மற்றும் விரிவாக்கம் செய்யப்படவுள்ள தொழில்களுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
The post முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் இன்று மதியம் நடைபெறுகிறது appeared first on Dinakaran.