திருவொற்றியூர்: சென்னை வடக்கு கிழக்கு மாவட்டம், மாதவரம் வடக்கு பகுதி திமுக சார்பில், முதல்வர் மு.க.ஸ்டாலின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, மணலி மண்டலம் 17வது வார்டு தீயம்பாக்கத்தில் நடந்தது. பகுதி செயலாளர் புழல் நாராயணன் தலைமை ஏற்று, விவசாயிகள், தூய்மைப்பணியாளர்கள், பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்களுக்கு அறுசுவையுடன் சிற்றுண்டி மற்றும் முதியோர்களுக்கு போர்வை போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் தூய்மைப்பணியாளர்கள் கவுரவிக்கப்பட்டனர். பின்னர் புழல் நாராயணன் மற்றும் நிர்வாகிகள் கருணாகரன், பாலாஜி, மூர்த்தி, சண்முக பிரியன், திவாகர், அஜய் தென்னவன் ஆகியோர் திமுக ஆட்சியின் சாதனை பட்டியல் அடங்கிய துண்டறிக்கையை வீடு, வீடாக சென்று கொடுத்து பல்வேறு திட்டங்களை எடுத்துரைத்து திண்ணை பிரசாரம் செய்தனர்.
The post முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவி appeared first on Dinakaran.