முதல்வரின் பிறந்தநாளை பொதுமக்களின் நலம் பயக்கும்படி கொண்டாட வேண்டும்: திமுக ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் பேச்சு

1 week ago 3

திருவள்ளூர்: திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக ஆலோசனைக் கூட்டம் காக்களூரில் மாவட்ட அவைத் தலைவர் மா.ராஜி தலைமையில் நடந்தது. இதில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ, கே.ஜெ.ரமேஷ், சி.ஜெரால்டு, பிரபு கஜேந்திரன், சீனிவாசன். ஜெயபாலன், காயத்திரி ஸ்ரீதர், தொழுவூர் பா.நரேஷ்குமார், எத்திராஜ், ராஜேந்திரன், விமல்வர்ஷன், முத்தமிழ்செல்வன், வி.குமார், மகாதேவன், காஞ்சனா சுதாகர், எஸ்.சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் ஜெயசீலன் வரவேற்றார். இந்த கூட்டத்தில் மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான ஆவடி சா.மு.நாசர் ஆலோசனைகள் வழங்கினார்.

அப்போது அமைச்சர் பேசுகையில், திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை இந்த ஆண்டு சாதனைகளின் திருவிழாவாக பொதுமக்களின் நலம்பயக்கும்படி கொண்டாடப்பட வேண்டும். கழகத்தின் பெருமையை பறைசாற்றும் வகையில் கழக கொடியை ஏற்றி, ஏழை, எளியவர்கள், மாற்றுதிறனாளிகள், நரிக்குறவர்கள் மற்றும் ஆதரவற்றோர், முதியோர் இல்லங்களில் உள்ளவர்களுக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கியும், மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள், அறுசுவை உணவு வழங்கியும் வெகு விமர்சையாக கொண்டாட வேண்டும். மேலும் மாபெரும் பொதுக்கூட்டங்கள் நடத்திட வேண்டும் என்றார்.

தொடர்ந்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை மிக விமரிசையாக பொதுக்கூட்டங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடிய ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்கள், பல்வேறு அணிகளின் அமைப்பாளர்களுக்கு நினைவுபரிசாக கைக் கடிகாரம் வழங்கி அமைச்சர் பாராட்டினார். இதில் மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்கள் சன்.பிரகாஷ், தேசிங்கு ப.ச.கமலேஷ், திருமலை, பிரேம் ஆனந்த், என்.இ.கே.மூர்த்தி, தி.வை.ரவி, பேபிசேகர், பொன்விஜயன், நாராயண பிரசாத், தி.வே.முனுசாமி, தங்கம் முரளி, புஜ்ஜி ராமகிருஷ்ணன், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் பவுல், உமா மகேஸ்வரன், தியாகராஜன், குமரேசன், மோகன், விமல் ஆனந்த், சவுந்தரராஜன் மாவட்ட துணை அமைப்பாளர் நத்தமேடு கெஜலட்சுமி சேகர் மற்றும் துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

The post முதல்வரின் பிறந்தநாளை பொதுமக்களின் நலம் பயக்கும்படி கொண்டாட வேண்டும்: திமுக ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் பேச்சு appeared first on Dinakaran.

Read Entire Article