முதல் டெஸ்ட்: களத்தில் வார்த்தை மோதலில் ஈடுபட்ட சிராஜ் - ஹாரி புரூக்... வீடியோ வைரல்

3 hours ago 3

லீட்ஸ்,

இங்கிலாந்துக்கு சென்றுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 113 ஓவர்களில் 471 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் ஜெய்ஸ்வால் (101 ரன்கள்), கில் (147 ரன்கள்) மற்றும் ரிஷப் பண்ட் (134 ரன்கள்) சதம் விளாசினர். இங்கிலாந்து அணி தரப்பில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், ஜோஷ் டாங்கு தலா 4 விக்கெட் சாய்த்தனர்.

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 100.4 ஓவர்களில் 465 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் முதல் இன்னிங்சில் இந்திய அணி 6 ரன்கள் முன்னிலை பெற்றது. இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஆலி போப் 106 ரன்களும், ஹாரி புரூக் 99 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினர்.

முன்னதாக இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தபோது 84-வது ஓவரை முகமது சிராஜ் வீசினார். அந்த ஓவரை ஹாரி புரூக் எதிர்கொண்டார். அந்த ஓவரின் 2-வது மற்றும் 3-வது பந்துகளில் புரூக் அதிரடியாக பவுண்டரி விளாசினார். 4-வது பந்தில் 2 ரன்கள் அடிக்க 5-வது பந்து ஹாரி புரூக்கின் முழங்கை மற்றும் தொடையில் பட்டு தரையில் விழுந்தது.

அந்த சமயத்தில் முகமது சிராஜ் - ஹாரி புரூக் நேருக்கு நேர் பார்த்து முறைத்தனர். மேலும் சிராஜ், ஹாரி புரூக்கை பார்த்து ஏதோ கூறியதாக தெரிகிறது. அதற்கு பதிலளிக்கும் விதமாக ஹாரி புரூக்கும் கூற இருவருக்குமிடையே காரசாரமான வார்த்தை மோதல் உருவானது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

️ Tensions rising in the middle!#MohammedSiraj and #HarryBrook in a fiery exchange as the heat is on at Headingley! #ENGvIND 1st Test Day 3 LIVE NOW Streaming on JioHotstar https://t.co/SIJ5ri9fiC pic.twitter.com/nKZTSeFZt1

— Star Sports (@StarSportsIndia) June 22, 2025
Read Entire Article