முதல் ஒருநாள் போட்டி; இந்தியா - இங்கிலாந்து அணிகள் இன்று மோதல்

3 hours ago 1

நாக்பூர்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று நாக்பூரில் நடக்கிறது.

வருகிற 19-ந்தேதி ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்க இருப்பதால் அதற்கு சீரிய முறையில் தயாராவதற்கு இந்த தொடர் உதவிகரமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதனால் இரு அணியினருமே இந்த தொடரை தீவிரமாக எடுத்துக் கொள்வார்கள்.

டி20 தொடரில் அடைந்த தோல்விக்கு ஒருநாள் தொடர் மூலம் இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுக்க இங்கிலாந்து முயற்சிக்கும். அதே வேளையில் சொந்த மண்ணில் வெற்றிப் பயணத்தை தொடர இந்தியா கடுமையாக போராடும்.இதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

போட்டி நடக்கும் நாக்பூர் ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமானது. இரு அணியிலும் அதிரடி சூரர்கள் அணிவகுத்து நிற்பதால் ரன்மழையை எதிர்பார்க்கலாம். இங்கு இதுவரை 9 ஒரு நாள் போட்டிகள் நடந்துள்ளன. இதில் இந்திய அணி 6 ஆட்டங்களில் விளையாடி 4-ல் வெற்றியும், 2-ல் தோல்வியும் கண்டுள்ளது.

இங்கிலாந்து அணி இந்திய மண்ணில் நேரடி ஒரு நாள் தொடரில் இதுவரை 10 முறை விளையாடி அவற்றில் ஒன்றில் மட்டுமே தொடரை கைப்பற்றி இருக்கிறது இந்திய நேரப்படி ஆட்டம் மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

Read Entire Article