
ரோம்,
இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடைபெற்று வருகிறது. பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), அர்ஜெண்டினாவின் காமிலோ உகோ கராபெல்லி உடன் மோதினார்.
இந்த போட்டியின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஸ்வெரேவ் 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்கில் காமிலோ உகோ கராபெல்லியை வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் 3வது சுற்று ஆட்டத்தில் ஸ்வெரேவ், லிதுவேனியனின் வில்லியஸ் கவுபாஸ் உடன் மோத உள்ளார்.