முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து..!!

3 hours ago 1

டெல்லி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஆளுநர் ஆர்.என்.ரவி, முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறிய வாழ்த்து செய்தியில்;

முதலமைச்சருக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கடிதம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதல்வருக்கு குடியரசு துணைத் தலைவர் வாழ்த்து:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். முதலமைச்சருக்கு குடியரசுத் துணை தலைவர் ஜெகதீப் தன்கர் தொலைபேசி மூலம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

முதலமைச்சருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து:
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் பெற வாழ்த்துகிறேன்.

முதலமைச்சருக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து:
இந்தியாவின் வளமான பன்முகத்தன்மை, கூட்டாட்சி அமைப்பு மற்றும் அரசியலமைப்பு விழுமியங்களைப் பாதுகாப்பதில் நாம் தொடர்ந்து ஒன்றாக நிற்போம்.

எனது சகோதரர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் தமிழ்நாடு மக்களுக்குச் சேவை செய்ய வாழ்த்துகிறேன்.

முதலமைச்சருக்கு மல்லிகார்ஜுன கார்கே வாழ்த்து:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாப்பதிலும் ஜனநாயக கொள்கைகளை நிலைநிறுத்துவதிலும் ஒன்றாக பயணிப்போம். நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பதிவிட்டுள்ளார்.

முதலமைச்சருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து:
அன்புள்ள முதலமைச்சர் அவர்களுக்கு,
தாங்கள் இன்று தங்களுடைய 72ஆவது பிறந்தநாளை கொண்டாடுவதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். தங்களுடைய தலைமையின்கீழ் தமிழ்நாட்டு மக்கள் எல்லா நலன்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன்.

மேலும் எல்லாம் வல்ல இறைவன் அருளால் தாங்கள் பூரண உடல் ஆரோக்கியத்துடனும், சந்தோஷத்துடனும், தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை ஆற்றிடவும் இந்நன்நாளில் தங்களை வாழ்த்துகிறேன்.

முதலமைச்சருக்கு ப.சிதம்பரம் பிறந்தநாள் வாழ்த்து:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தங்களுக்கு என் அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தங்கள் தலைமையில் தமிழ்நாடு எல்லாத் துறைகளிலும் திசைகளிலும் முன்னேறும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

நலமுடன் நல்லாட்சி நடத்துக!. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து..!! appeared first on Dinakaran.

Read Entire Article