சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி திமுக மாணவர் அணி சார்பில் டெல்லியில் பிப்ரவரி .6ம் தேதி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்ட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ஒன்றிய பா.ஜ.க. அரசின் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு வெளியிட்டுள்ள வரைவு நெறிமுறைகள் 2025 திரும்பப் பெற வலியுறுத்தி, முதலமைச்சரின் அறிவிப்பிற்கிணங்க, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழிகாட்டுதலோடு, தலைநகர் டெல்லி, ஜந்தர் மந்தரில் கழக மாணவர் அணி சார்பில்,
வரும் 06.02.2025 அன்று காலை 10.00 மணியளவில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துக் கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.கழக மாணவர் அணியின் மாநில, மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள் தங்களது துணை அமைப்பாளர்கள் மற்றும் மாணவர் அணியினருடன் பெருமளவில் பங்கேற்று ஆர்பாட்டத்தை வெற்றியடைச் செய்ய வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். மாணவர்களின் கல்வி உரிமை; தமிழ்நாட்டின் மாநில உரிமையை காத்திட நாம் அனைவரும் அணி திரள்வோம்! யு.ஜி.சி.யின் அதிகார அத்துமீறலை முறியடிப்போம் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
The post முதலமைச்சர் உத்தரவின்படி திமுக மாணவர் அணி சார்பில் டெல்லியில் பிப்.6ம் தேதி மாபெரும் ஆர்ப்பாட்டம்..!! appeared first on Dinakaran.