மணவாளநகரில் ஜல்லிகள் பெயர்ந்த சாலையால் மக்கள் கடும் அவதி

2 hours ago 1

திருவள்ளூர்; திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் வெங்கத்தூர் ஊராட்சிக்குட்பட்டது மணவாளநகர். இந்த பகுதியில் உள்ள பல தெருக்களில் ஜல்லி கற்கள் பெயர்ந்து மோசமான நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் நடந்து செல்ல முடியாமல் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் தவறி கீழே விழுந்து படுகாயம் அடைகின்றனர்.

மேலும் இந்த பகுதியில் உள்ள காலிமனைகளில் கழிவுநீர், குப்பைகள் சேர்ந்து, புதர் மண்டி பாம்பு, தேள் போன்ற விஷப்பூச்சிகள் நடமாட்டம் உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகி்னறனர். எனவே, வட்டார வளர்ச்சி அதிகாரிகள் ஆய்வு செய்து சாலையை சீரமைக்கவும், காலி மனைகளில் தேங்கியுள்ள குப்பை மற்றும் கழிவுநீரை அகற்வும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மணவாளநகரில் ஜல்லிகள் பெயர்ந்த சாலையால் மக்கள் கடும் அவதி appeared first on Dinakaran.

Read Entire Article