முதன்முறையாக அடுத்தடுத்த சீசன்களில்... பிளேஆப் சுற்றில் இருந்து வெளியேறிய சென்னை அணி

5 hours ago 3

சென்னை,

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் மோதியது.

டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து, சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. 19.2 ஓவர்கள் முடிவில் 190 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. தொடர்ந்து 191 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணி, 19.4 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் எடுத்தது.

இதனால், 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி, பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில், கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் பிரப்சிம்ரன் சிங் ஆகியோரின் அரை சதம் மற்றும் யுஸ்வேந்திர சஹாலின் ஹாட்ரிக் விக்கெட்டுகள் ஆகியன பஞ்சாப் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்த ஏதுவானது.

இதனால், 6 வெற்றி, 3 தோல்வி மற்றும் ஒரு போட்டியில் முடிவு இல்லை என்ற வகையில் 13 புள்ளிகளுடன், அட்டவணையில் 2-ம் இடத்தில் பஞ்சாப் அணி முன்னேறி உள்ளது. 2 வெற்றிகள் மற்றும் 8 தோல்விகளுடன் 4 புள்ளிகளை பெற்று சென்னை அணி கடைசியில் உள்ளது.

இந்த முறை பெங்களூரு, டெல்லி, கொல்கத்தா, ஐதராபாத் மற்றும் பஞ்சாப் என 5 அணிகளிடம் சொந்த ஊரில் தோல்வியை சந்தித்த சென்னை அணி, மும்பை அணியை வென்றிருந்தது.

இந்த சூழலில் புள்ளிகளின் அடிப்படையில் பின்தங்கி உள்ள சென்னை அணி பிளேஆப் சுற்றில் விளையாட முடியாத நிலையில் உள்ளது. இதனால், முதன்முறையாக அடுத்தடுத்த சீசன்களில் பிளேஆப் சுற்றுக்கு முன்னேறாத நிலையை சென்னை அணி அடைந்து உள்ளது.

Read Entire Article