ஒற்றை கையால் சிக்சர் அடித்த தோனி.. கேட்ச் பிடித்த ஜடேஜா.. வீடியோ வைரல்

3 hours ago 1

சென்னை,

ஐ.பி.எல். தொடரில், நேற்று நடைபெற்ற 49-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 19.2 ஓவர்களில் 190 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக சாம் கர்ரன் 88 ரன்கள் அடித்தார். பஞ்சாப் தரப்பில் யுஸ்வேந்திர சாஹல் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் 191 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணி 19.4 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 194 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 72 ரன்கள் அடித்தார்.

இந்த ஆட்டத்தில் சென்னை கேப்டன் மகேந்திரசிங் தோனி ஒரு சிக்சர் ஒரு பவுண்டரி உட்பட 11 ரன்கள் அடித்தார். அதிலும் அந்த சிக்சரை ஒற்றை கையால் அடித்து பிரம்மிக்க வைத்தார்.

அந்த சிக்சர் எல்லைக்கோட்டிற்கு வெளியே சென்னை அணி வீரர்கள் அமர்ந்திருந்த இடத்தை நோக்கி பறந்தது. அதனை ஜடேஜா கேட்ச் செய்து மைதானத்திற்குள் வீசினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

MS Dhoni hitting one handed six and Jadeja taking his catch pic.twitter.com/RWnjxLG5rK

— . (@Shivayaaah) April 30, 2025
Read Entire Article