தேவையான பொருட்கள்:
மீல்மேக்கர் – 1/4 கப்
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 1
புளி – நெல்லிக்காய் அளவு
உப்பு – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மல்லித் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் — 1 சிட்டிகை
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்.
அரைக்க:
தேங்காய் – 2 டேபிள்ஸ்பூன்
சோம்பு ,கசகசா – தலா அரை டீஸ்பூன்
சின்ன வெங்காயம், பூண்டு தலா – 2
கறிவேப்பிலை – சிறிது
மல்லித் தழை – சிறிது
உப்பு – தேவைக்கு
செய்முறை:
மீல் மேக்கரை வெந்நீரில் போட்டு எடுத்து பிழிந்து இரண்டாக நறுக்கவும். புளியை 2 கப் நீரில் கரைத்து உப்பு, மஞ்சள் தூள், மல்லித்தூள், மிளகாய்த் தூள் சேர்த்து கலக்கவும்.தேங்காய், சோம்பு, கசகசா பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைக்கவும்.ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சோம்பு தாளித்து, நறுக்கிய வெங்காயம் தக்காளி கறி வேப்பிலை மீல் மேக்கர் நேர்த்து வதக்கவும்.பின் புளித்தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு, அரைத்த தேங்காய் விழுதைச் சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்கவிட்டு நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி அடுப்பிலிருந்து இறக்கவும்.சுவையான மீல் மேக்கர் குழம்பு ரெடி.
The post மீல்மேக்கர் குழம்பு appeared first on Dinakaran.