சென்னை: தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (4.2.2025) சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில், டெல்லியில் நடைபெற்ற அகில இந்திய குடியரசு தின என்.சி.சி முகாமில் நடைபெற்ற திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற என்.சி.சி மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை பரிசுகளையும், தமிழ்நாடு அளவில் சிறப்பாக செயல்பட்ட கோயம்புத்தூர் குழும தலைமையகத்திற்கு முதலமைச்சரின் பதாகையும் வழங்கினார்.
முன்னதாக சென்னை கலைவாணர் அரங்கில் தேசிய மாணவர் படை (என்.சி.சி) மாணவ, மாணவிகள் அமைத்த கண்காட்சியை பார்வையிட்டார். இந்த கண்காட்சியில் தேசிய மாணவர் படை மாணவ, மாணவிகள் அகில இந்திய, சர்வதேச அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டிகளில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டுள்ள அதிநவீன ரக துப்பாக்கியின் திறன் மற்றும் செயல்பாடு குறித்து தேசிய மாணவர் படை மாணவியின் விளக்கத்தை கேட்டறிந்தார்.
மேலும் விதைப்பந்துகள் மூலம் மலைப்பகுதியில் பசுமைப்பரப்பை அதிகரிக்கச் செய்யும் வகையில் தேசிய மாணவர் படையின் சமூகப் பணிகள் குறித்தும் கேட்டறிந்தார். தொடர்ந்து கலைவாணர் அரங்கின் முன், டெல்லியில் நடைபெற்ற அகில இந்திய குடியரசு தின என்.சி.சி முகாமில் பங்கேற்ற தமிழ்நாட்டின் தேசிய மாணவர் படை (என்.சி.சி) அலுவலர்கள் மற்றும் மாணவ மாணவிகளுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரை; “தேசிய மாணவர் படையினுடைய Chief Minister’s Rally மற்றும் Republic Day Contingent-ல் பங்கேற்ற தமிழ்நாடு NCC குழுவுக்கான பாராட்டு விழாவில் பங்கேற்று உங்கள் முன் உரையாற்றுவதில் மிகுந்த பெருமையும் மகிழ்ச்சியும் அடைகின்றேன்” என உரையாற்றினார்.
The post அகில இந்திய குடியரசு தின என்.சி.சி முகாமில் நடைபெற்ற திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற என்.சி.சி மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார் துணை முதலமைச்சர் appeared first on Dinakaran.