தேவையான பொருட்கள்
தேவைகேற்பமீன்
3பட்டை
15ஏலக்காய்
2நட்சத்திர சோம்பு
2 டேபிள்ஸ்பூன்கிராம்பு
1தக்காளி
2பெரிய வெங்காயம்
புதினா
மல்லிக்கீரை
3பச்சை மிளகாய்
எலுமிச்சை பழம் பாதி
2 டேபிள் ஸ்பூன்வத்தல் தூள்
2 டேபிள் ஸ்பூன்மல்லித்தூள்
1 டேபிள்ஸ்பூன்மஞ்சள்தூள்
தேவைக்கேற்பஉப்பு
பிரியாணி இலை
இஞ்சி பூண்டு விழுது
பொரிப்பதற்குஎண்ணெய்
தண்ணீர்
செய்முறை:
இதற்கு முதலில் மீனை பொரித்து எடுக்க வேண்டும். இதற்கு முதலில் வைத்திருக்கும் வத்தல் தூள் மல்லித்தூள் மஞ்சள் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து அதனோடு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அதை ஒரு கலவை போல் தயார் செய்து கொள்ள வேண்டும்.பின்பு அதை மீனின் மீது தடவி அதை ஒரு 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து அந்த மீனை அதில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.இப்பொழுது பிரியாணி செய்வதற்கு தேவையான காய்கறிகளை நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். பின்பு இஞ்சி பூண்டை அரைத்து வைக்க வேண்டும்.இப்பொழுது மசாலா செய்வதற்கு தேவையான பட்டை கிராம்பு ஏலக்காய் நட்சத்திர சோம்பு ஒரு மிக்ஸி ஜாரில் வைத்து நன்றாக அரைத்து எடுக்க வேண்டும்.பின்பு ஒரு பிரஷர் குக்கரில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதில் வைத்திருக்கும் பெரிய வெங்காயம் தக்காளி பச்சைமிளகாய் புதினா சேர்த்து நன்றாக வதக்கி எடுக்க வேண்டும். அரைத்து வைத்திருக்கும் மசாலாவை அதனோடு சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்க வேண்டும்.தேவையான அளவு தண்ணீர் சேர்க்க வேண்டும்.பின்பு நாம் ஊற வைத்திருக்கும் அரிசியை அதனோடு சேர்க்கவேண்டும்.தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும்.இப்பொழுது நான் பொரித்து வைத்திருக்கும் மீனை அதன் மேல் வைக்க வேண்டும். அரிசி வேகும் வரை காத்திருக்க வேண்டும்.சுவையான மீன் பிரியாணி ரெடி.
The post மீன் பிரியாணி appeared first on Dinakaran.